Wednesday, June 04, 2014

மயில் ஸ்னேகங்கள்

நான் சொல்ல வருவது ரயில் ஸ்னேங்களின் உல்டா. வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் செந்திலும் கவுண்டமணியுமாய், தளபதியும் மம்மூட்டியுமாய், அப்பாஸும் முஸ்தபாவுமாய், நாக்கு மேல் பல்லைப் போட்டு உரிமையோடு " ஏய் நீ என்ன பெரிய இவனாடா / இவளாடி..." என்று உரிமையோடு தோழனும் தோழியுமாய் ஒரே தட்டில் எச்சில் பரோட்டா தின்று, ஈரக் கையில் ஒட்டிய முடி மாதிரி உறவாடிய நட்பைப் பற்றி. அது தோழனாகவோ தோழியாகவோ இருந்திருக்கலாம். எப்பேற்பட்ட நட்பு என்றால், வேறு யாரவது நடுவில் வந்துவிட்டால் இந்த நட்பு நம்மை பின்னிப் பெடலெடுத்துவிடும். "போ..அங்கயே அப்படியே போய் சாவு..இங்க எதுக்கு வர்ற, நாங்களெல்லாம் இருக்கோம்ன்னு இப்பத் தான் தெரியுதாமா" என்று ஒரு வாரம் பேசாது.  அது ஒன்றும் பெரிய தவறில்லை என்று தெரிந்தாலும் மானம் வெட்கமேயில்லாமல் முதல் மரியாதை சிவாஜி மாதிரி நாமும் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே போய் நாயாய் கெஞ்சும் நட்பு. "இன்னொரு தரம் மட்டும் இப்படி செஞ்ச, பார்க்கவே மாட்டேன் வெட்டியே போட்டுருவேன்..நிஜமா" என்று மிரட்டி மன்னிக்கும் நட்பு. நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விட இவர்களுக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும். நாளும் கிழமையுமானால் முதல் ஃபோன் இவர்களிடமிருந்து வரவே வராது. அதுவும் பிறந்தநாள் என்றால் சுத்தமாய் மறந்துவிட்ட மாதிரி நடித்து நம்மை வெறுப்பேத்தும். நாமும் வெறுத்துப் போய் "தூ இவ்வளவு தானா நீ.." என்று வசனம் பேச எத்தனிக்கையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து புருவத்தை உயர்த்தி சட்டையைப் பிடித்து "என்ன சொல்ல வந்த நீ இப்ப..." என்று தளும்ப வைக்கும்.

எல்லாரும் கூட்டம் கூட்டமாய் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் போது "இப்ப நானா அவங்களா" என்று வீ.சேகர் பட க்ளாமாக்ஸ் சீனெல்லாம் கொடுத்து, இப்பேற்பட்ட நட்பால் நமக்கு இவர்களைத் தவிர ஊரில் இருக்கிற ஒரு பயபுள்ளைகளைத் தெரிந்திருக்காது. ஆனாலும் மனது மட்டும் நிறைந்திருக்கும். நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது எவனாவது வைத்த கொள்ளிக் கண்ணினால் இஞ்சி மொரப்பாவில் சுக்கு போட்ட தகறாரில் பட்டென்று ஒரு நாள் நட்பு தெறித்துவிடும். ஒரு இரண்டு மூன்று வருடங்கள் சில சமயம் பல வருடங்கள் பார்க்காமலே பேசாமலே இருப்போம். ஆனால் காலம் இருக்கே காலம் திடிரென்று பேஸ்புக் ட்விட்டர் என்று எங்கேயாவது கோர்த்துவிட்டு விடும். மௌன ராகம் சீன் மாதிரி நிறைய பேசாமல் , மனதுக்குள் மட்டுமே நிறைய நினைப்போம். அவர்களுக்குத் தெரியாமல் நோட்டம் விடுவோம். பழைய பரோட்டா கடை மேட்டரிலிருந்து எல்லா விஷயங்களும் மயிலிறகால் தடவி விட்ட மாதிரி மனதில் ஓடும். எனக்கும் சில பல மயில் ஸ்னேங்கள் இருக்கின்றன. தற்போது கூட "எப்படி இருக்க" என்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த நினைவுகள் இருக்கின்றதே - அது அவர்களுக்கே சொந்தமில்லாமல் என்னுடையதாய் எனக்கே எனக்காய் அப்படியே நெஞ்சில் பசுமையாய் இருக்கின்றது - திரும்ப பேசாமல் அப்படியே பத்திரமாய் !

19 comments:

Unknown said...

Attagaasam... Me the firstu !

Sh... said...

ithu sneham mathiri theriyalaye....Thangamani padichaangala?

Kavitha said...

Nalla ezhudhi irukkeengale :)

Madhuram said...

Why ore feelings? The title is so fresh, apt and meaningful.

எல் கே said...

அந்த நினைவுகள் சுகம் அண்ணே... நீங்கள் சொன்னது நிஜம்தான்... நானும் சில பழைய நட்புகளை பார்த்துவிட்டு பிளாஷ்பேக் ஓட்டுவேன் அதோட அம்புட்டுதான்

muthu said...

Good read...after a long time....

ஒன்னும் தெரியாதவன் said...

நிறைய நிறைய இருக்கு நெஞ்சு நெறைய

Anonymous said...

Antha maathiri friends Ku oorla Ella vishayamum therinjirukkum.namakku avangala nalla theriyumgra ore qualification pothum.
Nice post - uthra

RVS said...

டைட்டில் சாங் கிடையாதா தலைவரே? :-)

அமுதா கிருஷ்ணா said...

ம்ம்ம்ம்..........

சுசி said...

என்னாச்சுண்ணே??? ஒரே பீலிங்க்ஸா எழுதிபுட்டீங்க?? நீங்க “மயில்” ஸ்னேகம்ன்னு போட்டிருந்தத பார்த்து “மயில் போல இருக்கிற பெண்கள்” ஸ்னேகம் பற்றி எதோ எழுதி இருப்பீங்கன்னு ஆர்வமா வந்து பார்த்தேன். (எங்களை எல்லாம் எப்படி தயார் பண்ணியிருக்கீங்க பாருங்க) பை த பை இந்த மாதிரி நிறைய எனக்கும் இருக்கிறது. திரும்ப பேசலாம்ன்னா இந்த “ஈகோ” இருக்கே “ஈகோ” அது கோவிச்சிக்குது.

Unknown said...

impeccable timing ! and so true ! something similar happened to me. just 2 days ago i sent my friend a msg asking if she wants to be friends again. i didnt know what to expect but decided to contact her anyway. she responded positively and i feel so good !

Thanai thalaivi : Egovala endha useunm illa !

Lakshmi

Anonymous said...

இந்த நெல்லும் உமியும் ஒன்னா பொறந்தாலும் ஒரு தடவை பிரிஞ்சிட்டா திரும்ப சேர்ந்தாலும் அந்த பழைய ஒட்டுதல் திரும்ப வராதுன்னு அந்த மாதிரி தான் ஃப்ரெண்ட்ஷிப்பும் ந்னு ஒரு செய்யுள் சின்ன வயசுல பாடத்துல படிச்சிருக்கேன். எவ்வளவு உண்மை. திரும்ப பேசினாலும் பழைய ஒட்டுதல் வருமா!!! மீரா ஜானகிராமன்.

Mahesh Prabhu said...

எனக்கு நண்பர்களுடன் பகிர்ந்த நிமிடங்களை லேசாக தொட்டு பார்த்தது போல் இருந்தது....

இராமச்சந்திரன் said...

தல.. தலைப்பு சூப்பர்... இதை இத்துடன் நிறுத்திவிடாமல் கொஞ்சம் தொடரவும்... (மயில் ஸ்நேகங்கள்.. பால்வாடி முதல்). ஏதேனும் க்ளூ வேண்டுமெனில் யூ ட்யூப் சன் டிவியில் "விருந்தினர் பக்கம்" ப்ளே லிஸ்ட்டில் லிங்குசாமியின் பேட்டி காணவும்.

saraswathi said...

Very well written
I was feeling blue today and this was just apt
excellent o sinor

Anonymous said...

I dont think a deep friendship can let you go like that . so far i have always felt that friends when meet after alooooong gap or time will start off without any starting problem .எவ்ளோ நாள் ஆனாலும் எங்க விட்டோமோ அங்க அப்படியே பழைய பந்தம் தொடங்கிடும்னு ல நென ச்சுட்டு இருக்கேன் .. எப்பிடி ?,...அப்டியே..... எப்பிடி இருக்க? வோட போக முடியும் ?ssk

வல்லிசிம்ஹன் said...

இதில் என்ன விசேஷம்னால் நீங்கள் என்று நினைத்து மற்றொரு டுபுக்குவுக்கு ஃப்ரன்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுத்துவிட்டேன்..நீங்க இல்லைன்னி தெரிஞ்சது. நலமா டுபுக்கு. நம்மைப் பொறுத்தவரை நட்பு மாறுவதில்லை. நம் தோழர்களுக்கும் அப்படியா என்பது சிலசமயம் டவுட் தான். நாற்பது கழித்துப் பார்த்த தோழி அயுதாள். சில வருடங்கள் கழித்து பார்த்த தோழி அப்புறம் என்ன விஷயம் என்று முடித்துக் கொண்டாள்.என்ன ஆகிவிட்டது என்ற வருத்தம் வந்தது.. ஒவ்வொருவர் அனுபவம் ஒவ்வொருவிதம் .நட்பின் ஆழத்தைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்..நல்ல பகிர்வுமா.

Dubukku said...

Unknown - danku

Sh - அட உண்மையாகவே ஸ்னேகம் தாங்க !!

பொயட்ரீ - டேங்க்ஸ்

மதுரம் - ஏன்னா அந்தப் பதிவ போடும் போது அந்த நட்பைப் பற்றிய நியாபகங்கள் அதான் :)

எல்.கே - அதே அதே ...கொஞ்சம் ப்ளாஷ் பேக் ஓடும். அவ்ளோ தான்

முத்து - மிக்க நன்றி

Ilyas - :))) கொட்டுங்க பாஸூ

உத்ரா - ஹா ஹா அத்தோட அன்பைப் பொழிவாங்க பாருங்க நம்மளாலேயே அடிச்சுக்க முடியாது

RVS - நீங்க கேட்டு இல்லாமலயா :)) என்ன பாட்டு வேணும் சொல்லுங்க :)

அமுதா - உங்களுக்கும் நினைவலைகளா?

தானைத் தலைவி - பார்த்தீங்களா நீங்க ஏதோ கற்பனை பண்ணிட்டு என்ன சொல்றீங்க ;) ஈ.கோ ஹூம் ஆமாம் அதுவும் இருக்கு நிறைய :)))

Lakshmi - Glad that you got back with your friend. ஆனா என்னுடைய கேஸில் மீண்டும் அதே காலங்கள் வருமா அதே பிணைப்பு இருக்குமாங்கிறதுக்கும் காலம் தான் பதில் சொல்லும். இது வரை அந்த நட்பு அப்படி ஏதும் காட்டல :) Just those golden memories are locked deep safely :)

மீரா - ரொம்ப உண்மை. மேலே லஷ்மிக்கு அதயேத் தான் நானும் சொல்லியிருக்கேன். சில பேருக்கு ஒட்டுது அது ரொம்ப நல்ல விஷயம். இந்த நட்பில் எனக்கு அப்படி ஆகவே இல்லை

மகேஷ் - மிக்க நன்றி சாரே. உங்கள் நினைவலைகளையும் தொட்டது பற்றி மகிழ்ச்சி

இராமச்சந்திரன் - தல எவ்வளவு நாளாச்சு. நல்லா இருக்கீங்களா. என்ன நடுவுல சவுண்டக் காணோம்? :))

Saraswathi - glad that stuck a chord :) thanks

SSK - True in some cases but in other cases like mine there was a small misunderstanding which caused the rift but even after we patched up after that it has never been the same and there was a gap after that for a long time and even recently I tried to strike a conversation which has gone in vain :(

வல்லியம்மா - அடடா..அதுக்கப்புறம் ....நல்ல வேளை கண்டுபிடிச்சீங்களே அது வரை மிக்க சந்தோஷம்.

Post a Comment

Related Posts