Sunday, April 23, 2006

இனி ஒரு விதி செய்வோம்!

காரு போட்டு ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு
அக்காளுன்னு தங்கச்சின்னு அவசரமா உறவு சொல்லி
ஓட்டு கேட்டு வந்தாங்களே சின்னாத்தா - இன்னிக்கு
ஒருத்தனையும் காணலையே செல்லாத்தா..

மல்லுவேட்டுத் துண்டு போட்டு மைக்கு வைச்சு விளம்பரங்க
வாழ்வு மலருமுன்னான் வறுமை தொலையுமுன்னான்...
போடுங்கம்மா ஓட்டுன்னான் புடலங்காய பார்த்துன்னான்
ஓட்டு போட்ட கையோடு சின்னாத்தா - இன்னிக்கு
ஒருத்தனையும் காணலையே செல்லாத்தா

வேலை கிடைக்குமுன்னான் விலைவாசி குறையுமுன்னான்
சாலை தெருவிளக்கு சர்காரு போடுமுன்னான்
போட்ட விளக்கு கூட இப்போ சின்னாத்தா - சும்மா
பொசுக்குன்னு போயிடுச்சே செல்லாத்தா

என்னுடைய தமிழ் வாத்தியார் எழுதித் தந்து உணர்ச்சிபூர்வமாக ராகத்தோடு பல பேச்சுப்போட்டிகளில் பேசிப் பரிசு வென்றிருக்கிறேன். அரசியல் என்பது சாக்கடை என்ற சித்தாந்தம் அடிமனதில் ஊன்றியிருக்கிறது. "ஆயுத எழுத்து" பார்த்து மணிரத்தினத்தை நினைத்து புன்முறுவலுடன் உதட்டைப் பிதுக்கி இருக்கிறேன். பெட்டிகளும், சீட்டுகளும் தீர்மாணிக்கும் கொள்கைகளுக்கும், கடைசி நேர தேர்தல் நேர கூட்டணிகளுக்கும் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவைதை விட பால்கோவா சாப்பிட்டுவிட்டு பல்லைக் குத்திக் கொண்டிருக்கலாம் என்று ஒரு தரம் கூட வோட்டுப் போடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ.ஒரு.மு.க ஆட்சிக்கு வரும் போது "கிழிச்சுருப் போறாங்க" என்பதை பெருசுகள் பேசட்டும் என்று புறந்தள்ளியிருக்கிறேன்."அப்துல் கலாம்" ஜனாதிபதியானாலும் அடுத்தது யார் என்ற நெருடல் இருந்திருக்கிறது.

வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது - நேற்று வரை. வோட்டர் ஐடென்டிட்டி கார்டு கூட வாங்கியதில்லை. இன்று வோட்டுப் போட முடியாதே என்று வருத்தப் படுகிறேன். இதெல்லாம் திருத்தவே முடியாத துறை என்ற எனது சித்தாந்ததிற்காக வருத்தப் படுகிறேன். நான் ஏங்கியது உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. படித்தவர்கள் "லோக் பரித்ரன்" என்ற கட்சி ஆரம்பித்து களம் இறங்கி இருக்கிறார்கள். அப்பிடி போடு அருவாள என்று உடம்பு சிலிர்கிறது. எடுத்தவுடனேயே ஆட்சியைப் பிடித்து விட முடியாது என்ற தெளிவு இருக்கிறது என்பதை உணர்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்து இருப்பது சந்தோஷத்தை தருகிறது. ஆட்டோ கலாச்சாரம் அழியும் காலம் அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

எத்தனையோ ஆட்சிகளைப் பார்த்துவிட்டோம். இவர்களுக்கு வாய்ப்பு குடுத்துப் பார்ப்போமே. உங்களில் ஓட்டுப் போடும் வாய்ப்பு இருப்பவர்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் - இவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் ப்ளிஸ். அரசியிலில் அனுபவம் இல்லை என்ற வாதங்களை புறந் தள்ளுங்கள். இப்போது இருப்பவர்கள் எல்லாம் ஊழலில் தான் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் பிரச்சாரத்திற்கு சன்.டீவியோ ஜே.டிவியோ சிம்ரன்,ராதிகா என்று நட்சத்திரப் பட்டாளமோ இல்லை...இவர்களுக்கு ஆதரவு திரட்ட நாம் துணை புரிவோம். "எம்.ஜியாருக்குத் தான் வோட்டு" என்று மூளைச் சலவை செய்யப் பெற்ற கிராமத்தவருக்கு இவர்களின் மகத்துவம் புரிய நம்மால் முடிந்ததைச் செய்வோம். இதுவரை வந்தவர்கள் எல்லாம் சுரண்டியது போதும். இவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்போம்...இவர்களால் இவர்கள் வாக்கிலிருந்து ஒரு வேளை எதுவும் செய்யத் தவறினாலும் ஒன்றும் குடிமுழிகிவிடப் போவதில்லை...இது வரை வந்தவர்கள் எல்லோரும் வழிப்பதைத் தவிர ஒன்றும் உடனே கிழித்துவிடவில்லை

அராஜக அரசியிலில் இவர்கள் காணாமல் போவதற்கு நமது ஆதரவு தான் அடிகோலும். "போடுங்கம்மா வோட்டு லோக் பரித்தனைப் பார்த்து" என்று கோஷம் போடுவதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை..உங்களுக்கு?



ஜன கண மன - ஜனங்களை நினை
கனவுகள் அல்ல காரியம் துணை
ஒளியே வழியாக மலையே படியாக
பகையோ பொடியாக

இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்
விதியினை மாற்றும் விதி செய்வோம்

42 comments:

ஜெயக்குமார் said...

//. நான் ஏங்கியது உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. படித்தவர்கள் "லோக் பரித்ரன்" என்ற கட்சி ஆரம்பித்து களம் இறங்கி இருக்கிறார்கள். அப்பிடி போடு அருவாள என்று உடம்பு சிலிர்கிறது. எடுத்தவுடனேயே ஆட்சியைப் பிடித்து விட முடியாது என்ற தெளிவு இருக்கிறது என்பதை உணர்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்து இருப்பது சந்தோஷத்தை தருகிறது. ஆட்டோ கலாச்சாரம் அழியும் காலம் அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.//

பார்த்தா நம்ம ஊரு மாதிரி தெரியலையே!.

Ananthoo said...

same pinch dubuks!
I just wrote something in similar lines about Lokparitran and as a follow up wanted to send email to my known(ok naan padikkum) fellow bloggers..so visited ur blog to check for ur email id and am surprised and happy for a better written write about lokP. I wish this awareness spreads and they get a commendable vote%
lets hope for the best..

Chakra said...

idhellam vendaam da..

ozhunga namma Captain ku vottu poduvom... 15 kg arisi, oru pasu maadu kedaikkum... saaptutu maadu mechu pozhachukalaam...

oosi said...

These are going to be few more Subramania Sami's ...

These guys can definitely contribute to the society in many other ways with their knowledge...

I read they have fielded a candidate in Mylapore but can you imagine how difficult it will be to canvass a party name like "Lok Paritran" in TN.

Anonymous said...

ena sir arasiyal ellaam pesarenga
but i tend to agree with you ..give them a chance to see if they can do it

Anonymous said...

"Engal annan" "Captain"kku intha murai chance Kodungappa ....appurama mathatha katchiellam pakkalam.

Puratchi kalaingar Vijayakanth Vazhga!!!!

daydreamer said...

adichu pidichu voter's id card vaangiten... annan solliteega potruvamilla vote ..

ambi said...

itha, itha itha thaan yethirpaarthen ungka kitta irunthu anna! inspiring, well scripted post. (paarthu, ethaavathu katchi outsourcing pannida poguthu)
in future naama oru katchi aarambippoom.. enna solringoo?
btw, romba naalu aachu, namma bloggukku vanthu..?

Premalatha said...
This comment has been removed by a blog administrator.
Premalatha said...

I agree with DtheD.

Anonymous said...

bangalorela irundhu chennai poi vazhkaila mudhal muraiya ottu poda poren -lpkku dhan

oru chance koduthu pakkalam enna dhan seiyarangannu

-bt

expertdabbler said...

superb post thalaiva,

in my opinion, lok paritran jeyikkaadhu.

but lok paritran ukku vizhara ovvoru vote um, will convey a message to other corrupt parties that people r prepared to vote differently for a better government.

the more the votes, the clearer the message. adukaaga vavadhu lok partran ukku vote podanum.

ithanai arajagankalayum parthuttu, thirumba andha katchgaulukkey vote pottom na, nammalai madhiri soranai ketta jenmangal yaarume irukka mudiyadhu!!

Jeevan said...

katchi thodanketta mattum pothathu, makkaluku eathuvanumnu tharianum. ilainjarkalla matum iruntha pothathu, makkaluku uthavura manasu vandum. padichavangala irukkanga, oru chance koduthu parthaal nalla thaan irukkum.

Dubukku said...

ஜெயக்குமார் - அவங்க வட இந்தியர்கள்ன்னு நினைக்கிறேன். ஒன்னு ரெண்டு பேர் மட்டும் நம்மூர் மாதிரி தெரியுது. ஆனாலும் பரவாயில்லைன்னு தோனுது. :)

Ananthoo - I too just saw your posts soon after I posted nice coincidence :)

Chakra - nee nakkalukku sonnalum...mathha thohuthiyila avangalukku oru chance kuduthu parkalamonu thonuthu

Dubukku said...

Premalatha/DtheD -

படித்தவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற கட்டாயம் இல்லை என்ற உங்கள் கருத்து எனக்கு ஒப்பானதே. ஆனால் இந்த "லோக் பரித்தரன்" எங்கேயும் ஊழல் செய்ததாக இதுவரை நான் அறியவில்லை. இது வரை ஆட்சிக்கு வந்த மு.க கட்சிகள் ஊழல் ஊரறிந்ததே. இன்றைய தேதியில் என்னைப் பொறுத்த வரை கொள்ளைக்காரன் தேவலையா கொலைகாரன் தேவலையா என்று தான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். இருக்கிற கட்சிகளில் எதாவது ஒரு கட்சி நல்ல கட்சி என்று நம்மால் சான்று வழங்க முடியுமா? இது தெரிந்தும் நாம் அவர்களை ஆட்சியில் அமர்த்தவில்லையா? லோக் பரித்திரனைப் பொறுத்த வரை அவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள் அல்லது மாறுவார்கள் என்பது ஒரு ரிஸ்க் தான். ஆனால் மற்ற கட்சிகளைப் பொறுத்த வரை அது ரிஸ்க் இல்லை தெரிந்த விஷயம். எனது தனிப்பட்ட கருத்து இந்த ரிஸ்க் எடுக்கலாம் என்பது தான். ஒருவேளை இவர்களைப் பற்றியும் தெரிந்து விட்டால் இருக்கவே இருக்கிறது அடுத்த தேர்தல். (இது வரை அப்பிடித் தானே இருந்திருக்கிறோம்?)

DtheD -
//ஏதோ தமிழ் பட டயலாக் மாதிரி இருக்கு. ஆனா நீங்க நெனக்கற மாதிரியெல்லாம் நடக்காது.
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி தொகுதியில மக்களுக்கு அவங்கள தெரியனும், நல்லவங்கன்னு நம்பிக்கை வரணும்//

ஹீ ஹீ நீங்க சொல்றதப் பார்த்தா...இது வரை ஜெயித்தவர்கள் எல்லோரும் நல்ல்வங்கங்கனு மக்கள் நம்பிட்டாங்கங்கிற மாதிரி இருக்கு. என்னைப் பொறுத்த மட்டில் கொலைகாரன் தேவலையா களவாணிப் பய தேவலையா சாய்ஸ் தான் எடுத்திருகிறோம்.

Dubukku said...

DtheD - //இந்த ground work இல்லாட்டி, மந்திரத்தில மாங்காய் வருமான்னு வானத்தை பாத்துகிட்டு இருக்க வேண்டியது தான்//

-- ஒத்துக்கொள்கிறேன். இந்த தேர்தலில் இருந்து ஆரம்பிக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். அதனால் தான் எடுத்த உடனேயே ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்ற நம்பிக்கை இருப்பதாக நான் சொன்னேன்.(அவர்கள் வைப் சைட்டில் குடைந்தது)

மற்றபடி PK சொன்ன கருத்துடன் ஒத்துப் போகிறேன்.
the more the votes, the clearer the message. adukaaga vavadhu lok partran ukku vote podanum.
இப்படித் தானே சாதி அரசியல் கட்சிக்ளெல்லாம் இன்றைக்குப் பெரிய ஆளாகியிருக்கிறார்கள்? இந்த நம்பர்களைப் பார்த்து மற்ற கட்சிகள் திருந்துவார்கள் என்று நான் நம்பவில்லை குறைந்த பட்சம் உஷாராகவது ஆவார்கள் என்று நினைக்கிறேன்.

இதே சித்தாந்தம் விஜய்காந்த் கட்சிக்கும் பொருந்தும். அவர் இன்னும் வேகத்துடன் இருக்கிறார் என்றும் நம்புகிறேன். அவருக்கும் சான்ஸ் குடுக்கலாம். ஆனால் அவருடைய இலவச பசுத் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை :)

உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டு இதை அருமையான விவாதமாக்கியதற்கு மிக்க நன்றி.

Dubukku said...

oosi - hehe few more subramanya saami's LOL but I agree Lok Paritran is a very nothish name to start with in Tamilnadu.

anon1 - arasiyalum pesuvomla :P yes very much my point :)

anon2 - hehe as said previously Captain also deserves that opening to prove himself. I would prefer him in the rest of the constituencies

daydreamer - kalakunga...annan aaa? but that sounds better than sir :) danks

ambi - danks. dei vandhu commentlam pottirukene parkalaya? f5 thattu. future katchi ...ohh arambikkalame

bt - unlike me you are being very responsible.(going from bangalore to chennai for voting) I admire that great!


PK - Yes PK me also feels the same but I agree with you let this be a starting point. Lets bring some change and give these guys a chance.

Dubukku said...

Jeevan - I agree with your views. But to know whether these guys can do anything what they are promising we need to give them a chance isn't?

Anonymous said...

Hello Dubukku Sir,

I am a recent frequent visitor to your blog. You are awesome.

When I first started reading your posting I thought you would recommend www.ohpodu.org kindly go through this site and post your comments on what you think. This is a better suggestion in my opinion. Please respond since this is my first posting.

Thanks!
Arun.

Harish said...

Absolutely boss...hope they secure some seats and help create a better india

Premalatha said...

DtheD, I am impressed. :)


people simply bashing captain think that
"bashing Captain"=="intellectual" .
It is a wrong idea. Also, it does not make them "well aware of politics" either..

what can I say, I agree with DtheD every sentence. :) areya startin a party? my vote is for you :)

Premalatha said...

dubukku,

politcsல "நல்லவங்க" அப்ப்டிங்கிற category கிடையாது. "நல்லவங்க"ளை எதிர்பார்க்கல நான். commitement முக்கியம். அது missing LKகிட்ட. சும்மா நாங்க புதுசு, படிச்சவங்க, வித்தியாசமானவங்க... பருப்பு வேகாது. என்னா டுபுக்கு, எத்தன படிச்சவங்கள தினம் பார்க்கிறீங்க. அவங்கள்ல யாராவது party ஆரம்பிச்சு ஓட்டு கேட்டா போடுவீங்களா? நாம் போட மாட்டேன். (anyway, my vote is for Tony Blair only. all other parties are irrelevant for me :D).

Premalatha said...

Lok மட்டும்தான் மண்டைக்கு வந்துச்சா, LKனு டைப் பண்ணிட்டேன். :(

இராமச்சந்திரன் said...

படிச்சவங்க எல்லாம் நல்லவங்களா, மக்கள் அறிமுகம் வேணும்...நல்லவங்கன்னு நம்பணும் அப்படின்னு சொல்றதெல்லாம்..சுத்த சோம்பேறித்தனம். சும்மா ஒரு வேலையும் செய்யாம ஒரு துளி பங்காற்றாம தள்ளி நின்னு விமரிசனம் மட்டும் வாய் கிழிய பேசறது சுலபம்.

கிட்டத்தட்ட 40 வருஷமாகப்போகுது. ரெண்டு கழகங்களும் மாறி மாறி ஆட்சி பண்ண ஆரம்பிச்சு. ஏதோ கடவுளின் கிருபை கொஞ்சமாவது இருந்ததால் தான் பீகாரை விட மோசமான நம்ம அரசியல்வாதிகள் இருந்தும் ஊர் அந்த அளவுக்கு மோசமா போகலை.

இவன் மட்டும் என்ன நல்லதா பண்ணிட போறான் அதுக்கு அவன் பரவாயில்லைனு சொல்றதெல்லாம் தெரிஞ்சும் நம்ம தலைல நம்மளே மண்ணை வாரி போட்டுக்கொள்வது போறது. இப்போதைக்கு நம்ம கைல இருக்கிற ஒரே துருப்பு சீட்டு ஆட்சிமாற்றம் பண்ணக்கூடிய நம்து வோட்டு. ஒரு மாற்றை உருவாக்கி அதுக்கப்புறம்தான் இவங்க நல்லவங்களானு அறிய முடியும் என்கிறபோது அதுக்கு முன்னாடியே வியாக்கியானம் தேவையில்லை. மாற்றத்திற்க்கு வழி செய்வோம்...அது நல்லது என்று புலனாகும் வரை.

இல்லையென்றால் நண்பர் சொன்னது போல, நமக்கிருக்கும் தெரிவு பிக்பாக்கெட்டா இல்லை கொள்ளைக்காரனா என்பது நிரந்தரமாகிவிடும்.

Dubukku said...

D The D -
//Patronizing a party, without looking into the merit of the candidate, is the beginning of all the evil.//

I haven't said anything contradicting this. My point is all these guys are new. How can we say they can't perform without giving them a chance? Do we have any demerits (apart from experience) against these guys? So how can we dismiss them incompetent?

//My view is that people should vote for a good candidate, irrespective of the party he/she belongs to//
- While my heart thinks the same, my brain goes a bit further to see if the the party leadership of the party he belongs has qualities to allow this. I dont want to mince any words here both DMK and ADMK supremos don't have this quality. Its dictatorship within these parties.

About Vijaykanth- I dont have anything against him and as said before I prefer him too. As far as TN is concerned my ideal choice would be just mix of these two parties in assembly (I know very well its not going happen)

But I dont expect LP to establish themselves like Vijaykanths party.(just my view)

//But as of now, if I find someone whom I can approach easily and who might engage himself in less evil than his opponents in the AIADMK or DMK alliances, my vote will be for them //

The key here is "less evil than opponents" - This is unfortunately the reality today which is why I prefer new faces even if they do not have any track record. I am not convinced with the idea of known devil is better than unknown angel - atleast in politics.

Again you have clearly said its your stand. Individual views do differ and thats what makes democracy more interesting! Thanks again for sharing them here.

Dubukku said...

Premalatha -
//politcsல "நல்லவங்க" அப்ப்டிங்கிற category கிடையாது. "நல்லவங்க"ளை எதிர்பார்க்கல நான்//
- Unfortunately thats the reality today.நான் சொல்லவந்தது "நல்ல ஆட்சி"


//commitement முக்கியம். அது missing LKகிட்ட//

இத எதவைச்சு சொல்றீங்கன்னு தெரியாது ஆனா என்னைப் பொறுத்தவரையில் கட்சி ஆரம்பித்து தேர்தல்ல நிக்கிறதுக்கே கமிட்மெண்ட் வேணும். படிச்சவங்க எல்லோரும் நல்லவங்களான்னா...இல்லைன்னு தைரியமா சொல்லுவேன். ஆனா என்னோட பாயிண்ட் இன்னிக்கு நமக்கு மாறுதல் வேணும் இரண்டு கட்சிகளை விட்டா ஆளு இல்லைன்னு சொன்னா...ஐந்து வருஷத்துக்கு ஒருதரம் மொத்த குத்தைக்கு விடறமாதிரி தான். இவங்களுக்கும் ஒரு சான்ஸ் குட்டுத்தா தானே தெரியும் இவங்களால நல்ல ஆட்சி கொண்டுவர முடியுமா இல்லையான்னு?

//Tony Blair// -- :)

Dubukku said...

Ramachandran - //ரெண்டு கழகங்களும் மாறி மாறி ஆட்சி பண்ண ஆரம்பிச்சு. ஏதோ கடவுளின் கிருபை கொஞ்சமாவது இருந்ததால் தான் பீகாரை விட மோசமான நம்ம அரசியல்வாதிகள் இருந்தும் ஊர் அந்த அளவுக்கு மோசமா போகலை//

ரொம்ப உண்மைங்க...இந்த தேர்தல் பார்த்தீங்களா..ஒரே இலவசமா இருக்கு...எங்கே போகிறோம்னு தெரியல...யாரோ சொன்ன மாதிரி ...வெள்ளைக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட ஒழுக்கம் எப்பிடி இருந்தாலும் தேர்தல்ல தாங்கள் தேர்ந்தெடுப்பவர்கள் ரொம்ப ஒழுக்கமா இருக்கனும்ன்னு நினைக்கிறாங்க....(திருட்டு தம் அடிச்சாங்க...ஸ்கூல்ல ரகளை பண்ணினாங்கங்கிறதெல்லாமும் ரொம்ப பெரிய விஷயம்) நம்மூர்ல கோடிக்கணக்கா கொள்ளையடிச்சு வழக்கு நிலுவையிலிருந்தாலும் மேட்டரே கிடையாது...என்னத்த சொல்றது...

Premalatha said...
This comment has been removed by a blog administrator.
Premalatha said...
This comment has been removed by a blog administrator.
Premalatha said...
This comment has been removed by a blog administrator.
Premalatha said...

I posted three comments and deleted them all. sorry.

Dubukku said...

Arunkumar - danks for dropping by and your compliments. Sure will through the link you have listed and post my comments here. thanks.

Harish - yes I just wish :)

Premalatha - no probs.

Anonymous said...

Are those guys in India on a three month vacation from US ?

Dubukku said...

answer me - LOL...I liked your thinking :) but I don't think so.

DtheD - //Sorry Dubukku, for being argumentative//

- Please dont be. It was very interesting and healthy to know your views and thanks for taking time to share those with us. I am always a fan of healthy argumets !

Dubukku said...

DtheD - On Ramachandrans comment though TN may be well ahead than Bihar. I recently passed a similar comment to my english friend. He was wondering abt the level of corruption prevailing in India, I just told him even with the level of corruption we are progressing and think what will be our rate of economy if we were without these corruptions

On your note about activists from institutes of excellence - very true just don't favour them just bcos they are from IIT. Welcome any body (education no par) with good intentions.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<---வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது --->
நானெல்லாம் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 3,4 தடவை அலைந்து திரிந்து தெரியாத மொழி(ஹிந்தி)யில் பேசி வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து, பாஸ்போர்டை காட்டி வோட்டு போட்டேன்.
<------
ஆனால் இந்த "லோக் பரித்தரன்" எங்கேயும் ஊழல் செய்ததாக இதுவரை நான் அறியவில்லை.
----->
என்னமோ இவர்கள் 4 தடவை ஆட்சியில் இருந்த மாதிரி சொல்றீங்க.
ஆனா,இவங்க முயற்சியை ஒரு நல்ல முயற்சியே.

ஆனா, நிரூபணம்(களத்தில் இறங்கி வேலை பார்த்தல் - எனக்கு எங்க ஊர் மறைந்த எம் எல் ஏ தாமரைக்கனி நினைவுக்கு வரார்) இல்லாமல் யாரும் அவ்வளவு எளிதில் நம்மப் போவதில்லை.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<---வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது --->
நானெல்லாம் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 3,4 தடவை அலைந்து திரிந்து தெரியாத மொழி(ஹிந்தி)யில் பேசி வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து, பாஸ்போர்டை காட்டி வோட்டு போட்டேன்.
<------
ஆனால் இந்த "லோக் பரித்தரன்" எங்கேயும் ஊழல் செய்ததாக இதுவரை நான் அறியவில்லை.
----->
என்னமோ இவர்கள் 4 தடவை ஆட்சியில் இருந்த மாதிரி சொல்றீங்க.
ஆனா,இவங்க முயற்சியை ஒரு நல்ல முயற்சியே.

ஆனா, நிரூபணம்(களத்தில் இறங்கி வேலை பார்த்தல் - எனக்கு எங்க ஊர் மறைந்த எம் எல் ஏ தாமரைக்கனி நினைவுக்கு வரார்) இல்லாமல் யாரும் அவ்வளவு எளிதில் நம்மப் போவதில்லை.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<---வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது --->
நானெல்லாம் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 3,4 தடவை அலைந்து திரிந்து தெரியாத மொழி(ஹிந்தி)யில் பேசி வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்து, பாஸ்போர்டை காட்டி வோட்டு போட்டேன்.
<------
ஆனால் இந்த "லோக் பரித்தரன்" எங்கேயும் ஊழல் செய்ததாக இதுவரை நான் அறியவில்லை.
----->
என்னமோ இவர்கள் 4 தடவை ஆட்சியில் இருந்த மாதிரி சொல்றீங்க.
ஆனா,இவங்க முயற்சியை ஒரு நல்ல முயற்சியே.

ஆனா, நிரூபணம்(களத்தில் இறங்கி வேலை பார்த்தல் - எனக்கு எங்க ஊர் மறைந்த எம் எல் ஏ தாமரைக்கனி நினைவுக்கு வரார்) இல்லாமல் யாரும் அவ்வளவு எளிதில் நம்மப் போவதில்லை.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

sorry. 3 முறை தடவை PUBLISH button-ஐஅழுத்திட்டேன்போல.

Premalatha said...

//Premalatha:
Many thanks for your vote :), Unfortunately, I cant contest in the UK ;).
//

what a shame:(
:D


I am an ardent fan of your blog
what!! ஏன் comment போடறதில்ல? போட்டாதான எனக்குத்தெரியும்?

and having got a compliment from you, I should say, it made my day. //

I am glad. :)

Anonymous said...

IDHU VARAI 'THILLU MULLU KAZHAGAM' MATRUM 'ADHIGA THILLU MULLU KAZHAGAM' IVATRAYE NAMBI VAKKALITHU VANDHA TAMIL NAATU MOODA JANANGAL NICHAYAMAGA 'LOK PARITHRAN' UKKU ORU VAIYPU KODUKALAM. THAVARILLAI.

Anonymous said...

Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!

Post a Comment

Related Posts