Tuesday, April 04, 2006

மேற்படிப்பு

MRF-ல் ரீஜினல் மேனேஜர் 75000 ரூபாய் சம்பளம் இது தான் நான் கொஞ்சம் விவரம் தெரிந்த சின்னப் பையனாக இருந்த போது என்னுடைய ட்ரீம் ஜாப். பேப்பரில் அந்த விளம்பரம் அடிக்கடி வரும். நான் பெரியவனாவது வரைக்கும் அந்த வேகன்ஸி நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். நன்றாகவே படித்து வந்தாலும் ப்ளஸ் டூ படிக்கும் போது குடும்பத்தில் இருந்த சில குழப்பங்களால் என்டரன்ஸ் எழுதமுடியவில்லை. எடுத்த மார்க்குக்கு இஞ்சினியரிங் இடம் கிடைத்து இருக்கும் என்றாலும் (இப்படித் தான் சொல்லிக்கிறது) பி.எஸ்.ஸியில் தான் சேர்ந்தேன். அதற்கப்புறம் சென்னை எம்.ஐ.டியில் சீட் கோவிந்தா ஆனவுடன் எம்.எஸ்.ஸி சேர்ந்தேன். எம்.எஸ்.ஸிக்கு அப்புறம் கேட் எழுதி எம்.பில், பி.ஹெச்.டி எல்லாம் படித்தால் தான் ஏதாவது ஏமாந்த சோனகிரி வேலை குடுப்பான் என்று மண்டையில் பல்பு எரிந்து தோராயமாக கணக்குப் போட்டு பார்த்ததில் இடைப்பட்ட காலகட்டத்தில் நூற்றி இருபது புதுக் கதாநாயகிகளும், மூன்று கனவுக் கன்னிகளும் மாறிவிட வாய்ப்பு இருப்பதால் எம்.எஸ்.ஸி வேலைக்காவாது என்று புரிந்தது. அத்தோடு வீட்டில் கல்யாணப் பிரஷர் வேறு. இந்த சமயத்தில் தான் சென்னைக்கு விடுமுறைக்காகப் போனேன். போன இடத்தில் சும்மா இராமல் என்.ஐ.ஐ.டிக்குப் போனால் அழகான பெண் கவுன்சிலர்கள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஏ.ஸி போட்டு தனியாக ரூமில் கடலை போடுவார்கள் என்று எவனோ சொன்னதை நம்பி போனதில் ஒரு புடவை அணிந்த பொங்கலின் கரிசனம் கிட்டியது(தாவணி போட்டா தீபாவளின்னா புடவையணிந்தால் பொங்கல் தானே?:P). "யெக்கா...வீட்டுல கல்யாணத்துக்கு பார்த்துட்டாங்கக்கா...அடுத்த மாசம் திருப்பதில கல்யாணம் ஏதோ உங்களால் முடிஞ்ச உதவி செய்யுங்கக்கா"ங்கிற ரீதியில் புலம்ப, "எம்.எஸ்.சி படித்தால் எருமை மாடு தான் மேய்க்கமுடியும் கம்ப்யூட்டர் படித்தால் தான் இருபத்தைந்து வயதில் கல்யாணம் பண்ணிக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு லண்டனில் செட்டிலாகி ப்ளாகெல்லாம் எழுதலாம்" என்று பொங்கல் அருள்வாக்கு சொல்லி அறுபதினாயிரத்தை பொங்கலோ பொங்கலிட்டு விட்டது.

"போஸ்ட் கிராஜுவேஷன எந்த முட்டாப் பயலாவது டிஸ்கண்டினியூ பண்ணுவானா" என்ற மாமாவின் வாதத்திற்கு "இன்னும் ரெண்டு வருஷத்தில முக்கிப் போறதிலேர்ந்து முக்காடு போடற வரைக்கும் எல்லாத்துக்கும் கம்ப்யூட்டர் தயவு வேண்டும்,போஸ்ட் கிராஜுவேஷன் எல்லாம் மொத்தமாக அழிந்துவிடும்" என்று யாகவா முனிவர் மாதிரி சொல்லிவிட்டு நைஸாக பெட்டியைத் தூக்கிக் கொண்டு மெட்ராஸ் வந்துவிட்டேன். வந்த அப்புறம் என்.ஐ.ஐ.டியில் எந்த பெண்ணுடனும் கடலை போடாமல்(இதை நீங்கள் நம்பியே ஆகனும்) கண்ணும் கருத்துமாய் படித்ததில் ராம்கோ சிஸ்டம்ஸில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தாலும் மேற்படிப்பு படி என்று மாமா விடுவதாய் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று கோயம்புத்தூர் பாரதியாரில் எம்.சி.ஏ சேர்ந்து கோயம்புத்தூருக்கு பரீட்சை எழுதப் போய், அன்னபூர்னாவில் வெரைட்டி ரைஸ் சாப்பிட்டுவிட்டு, மீரா நாயரின் "ஃபயர்" பார்த்துவிட்டு வந்தேன். இடைப்பட்ட காலத்தில் கல்யாணம் ஆகிவிட மாமா மெட்ராஸுக்கு குடித்தனம் வைக்க வந்து விட்டார். கல்யாணம் ஆகி படிக்கவேண்டிய படிப்புகளில் எம்.சி.ஏவும் சேர்ந்து கொண்டது. ராம்கோவில் சி.வியைக் குடுக்கிறேன் என்று அட்டெண்டன்ஸ் மட்டும் கரெக்டாக விழுந்துகொண்டிருந்ததே தவிர புஸ்தகமெல்லாம் சரஸ்வதி பூஜைக்கு ஏடு அடுக்குவதற்குத் தான் உபயோகமாய் இருந்தது. இந்த லட்சணத்தில் பரீட்சை வைத்தால் மனுஷன் என்ன பண்ணுவான்? பந்தாவாக பரீட்சைக்காக ஆபிஸுக்கு அரை அரை நாள் லீவு வேறு போட்டு விட்டேன்.

பரீட்சைக்குப் போய் ஃபெயிலாக இஷ்டமேயில்லை. வீட்டுக்குப் போனால் மாமா ஒத்துக் கொள்ளமாட்டார். "சரஸ்வதி தேவியை நான் எப்பிடி அவமானப் படுத்தலாம் என்பதிலிருந்து படிப்பு மோர்குழம்பு வைத்து அப்பளம் பொரித்து எப்படி சாப்பாடு போடும் என்பது வரை வாதம் போகும். ஆபிஸிலும் சொல்ல இஷ்டமில்லை. காலேஜைவிட கலாசலான டீம் அங்கு எங்கள் டீம். பயங்கரமாக ஓட்டுவார்கள். பெண்கள் பின்னாடி எல்லாம் கதை பேசமாட்டார்கள். நமுட்டுச் சிரிபுடன் நம்மை வைத்துக் கொண்டே ஓட்டுவார்கள். இந்த வேளையில் தங்கமணிக்கு பிறந்தநாள் வர எக்ஸாமுக்குப் போகாமல் நேர பாண்டி பஜாருக்குப் போய் தங்கமணிக்கு ஒரு வாரமாக பார்த்துப் பார்த்து ட்ரெஸ் எடுக்கப் போய் விட்டேன். கல்யாணமாகி படிக்கிறேன், பரிட்சை எழுதிகிறேன் பேர்வழி என்று பாண்டிபஜாரில் சுத்தின ஒரே பேர்வழி நானாகத் தான் இருக்கும். கல்யாணமாகி முதல் பிறந்தநாள், நல்லதாக எடுக்க வேண்டாமா? முதல் நாள் என்ன எடுக்க என்று பெண்கள் கடையாய் ஏறி வந்து ஹாட்சிப்ஸில் பேல் பூரி சாப்பிட்டேன். அடுத்த நாள் என்ன எடுப்பதென்று முடிவு செய்து பாவ் பாஜி. ஆனால் எல்லாத் பெண்கள் துணிக்கடைகளிலும் பெண்களே விற்பனைக்கு இருந்தார்கள். நான் தொழிலுக்கு புச்சு என்பதால் தயக்கம் வேறு. என் தயக்கத்தைப் சில கடைகளில் வேறு மாதிரி புரிந்து கொண்டு "சாருக்கு குயின்ஸ் ப்ரா எடுதுக் காட்டுங்க..புது டிசைன்லாம் வந்திருக்கு கூச்சப்படாம பாருங்க சார்" என்று கைக்காடிய போது வெட்கத்தில் “இல்லீங்க நான் அதுக்கு வரலை”ன்னு அவசரமாக மறுத்திருக்கிறேன். சல்வார் செக்க்ஷனில் என்னவெல்லாமோ ஜார்கனெல்லாம் போட்டு சில பெண்கள் தாக்குவார்கள். பேசாமல் நதியா பாவாடை, சில்க் ஜிப்பாவென்று இருந்தால் நமக்கும் வாங்க சுலபமாய் இருக்குமே என்று யோசித்ததுண்டு. தங்கமணிக்கு இதெல்லாம் படிச்சுப் பாஸாகிற கேஸில்லை என்பது தெரியுமாதலால் பாண்டிப்ஜாரில் சுத்துகிறேன் என்று தெரியும். ஆனால் ட்ரெஸ் வேட்டையை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தேன். ஏதோ ஒரு டிசைனர் பேஷன்ஸ் கடையில் பாந்தினி சாந்தினி என்று ஒரே அமுக்காக அமுக்கப் பார்த்தார்கள். எடுத்து தனியாக வைங்க... கல்யாணம் பண்ணிக் கொண்டு சாய்ங்காலமாக வருகிறேன் என்று நழுவி இருக்கிறேன். கடைசியில் ஒரு கடையில் பர்ஸுக்குப் பிடிச்ச கலராய் ஒன்று எடுத்துக் கொண்டு, போனால் போகிறது "சி, சி++"ல்லாம் இடது கையாலேயே எழுதி அசால்ட்டாய் பாஸாவேன் என்று ஒரே ஒரு பரீட்சை எழுதி ஜஸ்ட் பாஸில் தேறினேன். அதற்கடுத்த வருடமெல்லாம் மாமா கூட இல்லாததால் பாண்டிப்ஜார் குயின்களின் தொல்லையில்லாமல் லீவு போட்டுவிட்டு ராஜ் டிஜிடெல் ப்ளஸ்ஸில் "கனவனே கண்கண்ட தெய்வம்" பார்த்துக் கொண்டிருந்தேன்.

செல்லம்மாக்காவிடம் முந்தின ஜென்மத்தில் வாங்கின கடனால் பாரதியாருக்கு மூனுவருஷமும் பணத்தை மட்டும் கரெக்ட்டாகக் கட்டி கடனை கழித்துவிட்டேன். ஆபிஸில் "உன் பெண் வளர்ந்து உன்னை மிரட்டினால் தான் நீ எம்.சி.ஏ படிச்சு பாஸ் பண்ணப் போற" என்று ஓட்ட ஆரம்பித்த போது நல்லவேளையாக லண்டன் வந்துவிட்டேன். லண்டனிலும் ஸ்டைலாக எம்.பி.ஏ சேர்ந்து டிஸ்கண்டின்யூ பண்ணலாமா என்று யோசித்தேன். எம்.பி.ஏ விலையைக் கேட்டு எம்பாமலே வந்துவிட்டேன். ஊரில் வீடு கட்டி நேம் போர்டு போட்டால் எம்.எஸ்.ஸி, எம்.சி.ஏ என்று போட்டு ஸ்டைலாக மேலே கோடு போட்டுக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். இன்னமும் மாமா "லண்டனில் எதாவது மேற்படிப்பு படிக்கிறயா?" என்று அடிக்கடி கேட்பார். "படிக்கிறேன் மாமா...இன்னும் படிப்பார்வம் குறையல ஆபிஸில் நிறைய ப்ளாக் படிக்கிறேன்" என்பேன், அவரும் அது பெரிய படிப்பு என்று "நிறைய படி, படிப்பு தான் சோறு போடும்" என்பார். ஹூம் அதெல்லாம் படிக்கிற புள்ளைங்களுக்கு...

29 comments:

Muthu said...

:-))

துளசி கோபால் said...

டுபுக்கு,

எப்படிப்பா இப்படியெல்லாம் சரளமா எழுதவருது?

சரி, சரி, பொண்ணு எழுதறதுக்கு முன்னாலே
ப்ளாக் படிச்சுப் பாஸ் பண்ணும் எண்ணம் இருக்கா இல்லையா?:-)))

வெளிகண்ட நாதர் said...

//"சாருக்கு குயின்ஸ் ப்ரா எடுதுக் காட்டுங்க..புது டிசைன்லாம் வந்திருக்கு கூச்சப்படாம பாருங்க சார்" // நாயுடு ஹால் குள்ள ஏதும் பூந்திட்டீங்களா?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

டுபுக்கு, இந்தப் பதிவில் நகைச்சுவை இயல்பாக அருமையாக வந்திருக்கிறது. நன்று.

இலவசக்கொத்தனார் said...

அதான் உங்க பொண்ணு கிளாஸ்மேட் எல்லாம் உங்க கிளாஸ்மேட் ஆயாச்சே. அப்புறம் என்ன. படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதானே. :)

கவிதா | Kavitha said...

உங்கள் நகைசுவை நன்றாக உள்ளது.
தொடர்ந்து இது போல் எழுதுங்கள்..
நன்றி.

தகடூர் கோபி(Gopi) said...

:-))))))

அதெல்லாம் இருக்கட்டும்... எங்களை ஏன் ABCD 1234 படிக்கச் சொல்றீங்க?

அதான் கமெண்ட் மாடரேசன் வந்துடுச்சில்ல... வோர்ட் வெரிபிகேசன் எதுக்குங்க இன்னும்...

Anonymous said...

நீங்களும் என்.ஐ.ஐ.டி ல படிச்சீங்களா? நுங்கம்பாக்கமா? பெண்களுடன் பேசுவது எப்படி அப்படிங்கற கோர்ஸ்ல நானும் படிச்சேன் சார் :-)

Anonymous said...

kalakkal

Paavai said...

typing class - mer padippu edhallam seem to be standard in most families - naalu dharam ph.d kku register pannittu mudikkaama irukka ore aal naandhaannu nenachen - innum enga amma - andha phd yai muduchurrinnu -edho pudavaikku fall thethuchudungra reediyil pulambuvanga - thank god she does not know your mama

Kowshic said...

"பர்ஸுக்குப் பிடிச்ச கலராய்"

யோவ், எங்கேர்ந்துயா இதெல்லாம் புடிக்கிறீங்க? அதெல்லாம் தானா வர்ரதுதான், இல்ல? சோக்கா சொன்னயா!

expertdabbler said...

bharathiar velaiku avadha university IMHO.

working day la lab vechu kaluthu arupaan.

indha merpadippu / mudhiyor kalvi periya thalai vali dhaan dubukks.

enna panradhu nu therila:(

Chakra said...

abbba... innikku daan enakku therinja kadhai konjam ezhudhi irukke ..

kuttichuvaru said...

attagaasam!! comedy antha flow-la varuthu pola irukku!! 'pudavai kattina pongal'!! LOL!!!

Anonymous said...

11 aandugalukku piragu ippodhu embum muyarchi thodangiyullen tholaidhoora kalviyil...

neengalum padingalen company kodutha madhiri irukkum
naan vennum na ungalukku time table pottu koduthu follow panren ;-)

-bangalore thangachi

SLN said...

Ennoda sondha kathai, soega kathaiya kettaapula irunkkunga (of course, in a more interesting way). Andha 'more kozhambu vechu appalam porikkum' comment ERC (idam sutti porul vilakku) range quotation, abaaram.

SLN

இராமச்சந்திரன் said...

"எம்.எஸ்.சி படித்தால் எருமை மாடு தான் மேய்க்கமுடியும் கம்ப்யூட்டர் படித்தால் தான் இருபத்தைந்து வயதில் கல்யாணம் பண்ணிக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு லண்டனில் செட்டிலாகி ப்ளாகெல்லாம் எழுதலாம்" - Good one.

இப்பலாம்...ஊர்ல மாசம் 75000 சம்பளம் ரொம்ப சாதாரணமாயிடுச்சு. USA ல உன்னால மாசம் எவ்ளொ சேக்க முடியுதுன்னு நம்மளையே குசலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

Anonymous said...

kalakkal post, sir. ovvoru variyum arumai.

[ 'b u s p a s s' ] said...

டாப்பு டக்கரு...

நல்ல வேளை LKG UKG எல்லாம் கல்யாணத்துக்கு முன்னமே படிச்சி பாஸ் செஞ்சிட்டீங்க.

ambi said...

evloo batch job nadanthurukka madraslaaa? one more hilarious post from ambi's brother. good! Yen pera kaapaathinaa seri :)

Jeevan said...

Unga mama ippa enga irukkuraru. irunga oru e-mail anupuraan. Siruchi siruchi vaeru valikuthu dubukku

Dubukku said...

Muthu - :)

ஷாஜி- வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி ஷாஜி. Welcome to the world of blogging :)

துளசி கோபால்- எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்...நீங்க வேற...இனிமே படிப்பு சொல்லிக்குடுக்கறதாத் தான் இருக்கேன் :)

வெளிகண்ட நாதர் - :)) அங்க ஆம்பிளைங்களுக்கும் டிரெஸெல்லாம் சூப்பரா இருக்கும் தெரியுமில்ல...

செல்வராஜ் - மிக்க நன்றி.

இலவசக்கொத்தனார் -அது கீபோர்ட் க்ளாஸ்லங்க...போற போக்குல் இந்த க்ளாசுலயும் அந்த கதி தான்ங்கிறதாலேயே டிஸ்கண்டினியூ பண்ணிட்டோம்ல

Dubukku said...

Kavitha - மிக்க நன்றிங்க...:) முயற்சி செய்யறேன்.

Gopi- கமெண்ட் மாடரேஷன் வைக்க இஷ்டமில்ல அதான்....இருங்க இந்த வெரிபிகேஷனையும் தூக்கிடறேன்

சிவம் - தெரியுது....இருந்தாலும் சும்மா டமாசுக்குன்னே

Ferrari - அட ஆமாங்க...நுங்கம்பாக்கம் தான்...மொட்டை மாடில நிறைய பாடம் எடுத்திருப்பீங்களே? :P

anonymous - danks..:)

Dubukku said...

paavai - "edho pudavaikku fall thethuchudungra reediyil " - LOL phd yellam romba periya padippu...4 tharama...aathi romba periya aala irupeenga pola irukke :)

DNA - ஆமாங்க..தானா வரது தான்...டேங்க்ஸ்ங்க

PK - romba correct. Weekdaysla vechu kazhutharuthu..etho pasanaga punniyathula attendance vizhunthu .. Barathiyar la romba overa vera paduthuvanga ..kadaisila pongada neengalum unga MCAvumnu raajinama pannitten :)

Chakra - hehe...I am sure you would be able to recollect lots of memories from those days :)

Kuttichuvaru - danks...hehe

Sriram - danks..ellam ungala maadhiri inga varavangoloda encouragement thaan kaaranam :)

Dubukku said...

B.thangachi - danksnga aanaa enakku virumandi paatu thaan nyabagathukku varuthu. MBA lam vendanga...pozhaichu pohattum MBA :)

SLN - danks. ERC ...neraya school nyabagangala kilappi vituteenga :P

Ramachandran - ஆமாங்க...இந்த பிச்சாத்து காச சம்பாதிக்கவா..ஊர விட்டுப் போனன்னு நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.... பாரின் பிலிம் காட்டுற நாட்கள்லாம் மலையேறி போச்சு

Sundaresan - danks. indha "sir" lam vendame ...retire aanavanga pesikara maadhiri irukku :P

Buspass - நக்கலு..ஆங்?? நீங்கள்ல்லாம் படிக்கிற புள்ளையா இருப்பீஙன்ன்னு நினைக்கறேன்...ரொம்ப ஓவரா ஓட்டாதீங்கய்யா...:)

ambi - தோடா...டேய் இங்கேர்ந்து எதாவது இனிமே திருடிட்டு போய் அங்க உன்னோட தியேட்டர்ல பிட்டு ஓட்டின..இருக்கு உனக்கு...மவனே...

Jeevan - haiyooo jeevan venamnga...enga ippidiyellam miratareenga :)) unga systemla tamil font vandhodane enna miratta arambichuteenga partheengala :P

Usha said...

Hahahah. interesting.Inni pozhudile vangara degreekum paakara velaikum sambandame illada nelamayil acquiring qualification for a paying job is the intelligent strategy. Munni maadir padipudaan saapadu podum us no longer valid. enakkutherinju sila P.HD ellam pala varushathukapura, innum 200000 samblathil thindadi kondirukka raw engineers moda maasame 25000 take home le aarambikaradu.
Kadaiseele what matters is to be in the right place at the right time avlodaan.

Dubukku said...

Usha - you are right. what matters is to be in the right place at the right time!!
Chadra babu paatu thaan nyabagathukku varuthu :P

aruna said...

60 thousand in NIIT ! ya I remember in 1993, for 1yr course in NIIT, where they teach Dbase and Introduction to C only during the last month, the fee was 15K.whereas, after 2yrs every street has a sign board saying C for Rs.2000 in 15 days. As always, good post !!

Dubukku said...

Aruna - yes it was the case for GNIIT 3 years course :)

Post a Comment

Related Posts